15730 பாதம் காட்டும் பாதை (சிறுகதைத் தொகுப்பு).

மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, நவம்பர்; 2016. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம்).

xv, 182 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-955-41614-7-4.

ஆசிரியர் 2014 முதல் 2016 வரையான காலப்பகுதியில் எழுதிய பதினைந்து சிறுகதைகளின் தொகுப்பு இதுவாகும். 2016இல் அனைத்துலக திருக்குறள் போட்டி, 2014, 2015இல் ஞானம் சஞ்சிகையின் செம்பியன் செல்வன் சிறுகதைப் போட்டி, 2014 இல் பிரதேச கலை இலக்கியப் போட்டி ஆகியவற்றில் பரிசுபெற்ற சிறுகதைகள், 2015, 2016இல் தாயக ஒலி சஞ்சிகையில் இடம்பெற்ற சிறுகதைகள் ஆகியன இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. நல்ல கரு, வித்தியாசமான எடுத்துரைப்பு, சமூகப் படிப்பினை ஊட்டும் சம்பவங்கள், பொருத்தமான விழிப்புணர்வூட்டும் முடிவுகள் எனத் தனது பார்வையை ஆழமாக ஆசிரியர் பதித்திருப்பதை ஒவ்வொரு கதைகளிலும் காணமுடிகின்றது. இத்தொகுதியில் உள்ள கதைகள், பாதை காட்டும் பாதம், காத்திருந்த காதல், தீக்குள் விரலை வைத்தால், அவள் இப்போது பெரியவள், மண்ணீரும் ஆகாது, தவறிவரு முன்பே, துணையென ஒன்று, அங்கீகாரம், தனியொரு மனிதனுக்கு உணவு, சந்தோசப் பணம், எதிர்வீட்டுப் பெண், வேலைக்காரி, வேண்டியபோது வேண்டும், துளித்துளியாய், வலியது விதி ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்