மலரன்பன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2008. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(14), 15-121 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 22.5×15.5 சமீ., ISBN: 978-955-30-0985-2.
மலரன்பன்அறுபதுகளில் இலங்கையின் தேசிய இலக்கிய எழுச்சியில் உருவான மலையக படைப்பிலக்கியவாதிகளில் முக்கியமானவர். இச்சிறுகதைத் தொகுப்பில் மலரன்பன் 1991 முதல் 2005 வரை எழுதிப் பல்வேறு ஊடகங்களிலும் வெளிவந்த பன்னிரண்டு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. இவை சாமி வரம் (தினகரன்), பிள்ளையார் சுழி (வீரகேசரி), வனவாசம் (ப்ரவாகம்), பெரியதம்பியின் புள்ளி ஆடு (மல்லிகை), தமிழ்ச் சாதி (தினகரன்), சரவணன் (தாமரை), நந்தாவதி (வீரகேசரி), சாத்தான்கள் (தினகரன்), பாலைவனம் (வீரகேசரி), வியூகம் (கொழுந்து), மின்னல் (சிந்தாமணி), எமதர்மம் (வீரகேசரி) ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.