15733 பூமாஞ்சோலை.

சிவ ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, ஜுன் 2018. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 116 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-10-8.

மொறட்டுவைப் பல்கலைக்கழகப் பொறியியற் பட்டதாரியும் ஈழத்துப் படைப்பாளியுமான சிவ.ஆரூரன் பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தின் கீழ் இலங்கைச் சிறையில் வாழ்கின்றார். இவர் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளடங்கிய சிறுகதைத்தொகுப்பு இதுவாகும். சிறையிலிருந்தபடியே சிவ.ஆரூரன்; ‘யாழிசை’ என்ற நாவலை 2015 ஆம் ஆண்டில் வெளியிட்டிருந்தார். இந்த நாவலுக்கு இலங்கை அரசின் தேசிய சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. பூமாஞ்சோலையில், வலியும் கேலியும், ஒழுக்கத்தின் பரிசு, அப்பெட்டைக் குட்டி, தங்கச் சங்கிலி, விடுபட்ட விற்சுருள், சூரியக் கதிர், நிழல் உருவம், அன்புக்கும் அறிமுகம், நூறு ரூபா, சிறந்த மாணவன், உண(ர்)வுப் பொதி, செம்மை ஆகிய பன்னிரண்டு கதைகள் இடம்பெற்றுள்ளன. இந்நூல் 99ஆவது ஜீவநதி வெளியீடாக இந்நூல் வெளிவந்திருக்கிறது.

ஏனைய பதிவுகள்

14921 மக்கள் தலைவர் தொண்டமான் முத்துவிழா மலர்: 1992.

பெ.அ.இளஞ்செழியன் (தொகுப்பாசிரியர்). சென்னை 600 005: புலவர் பெ.அ.இளஞ்செழியன், இல. 9, சிவராமன் தெரு, திருவல்லிக்கேணி, 1வது பதிப்பு, 1992. (தமிழ்நாடு: அச்சிட்ட இடம் குறிப்பிடப்படவில்லை). 328 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை,