15735 போட்டிக் கதைகள்.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம். யாழ்ப்பாணம்;: இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கம், 226, காங்கேசன்துறை வீதி,  1வது பதிப்பு, ஒக்டோபர் 1963. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், 10, பிரதான வீதி).

(4), 116 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 18×12.5 சமீ.

பூ (எம்.ஏ.ரஹ்மான்), உணர்ச்சிக்கு அப்பால் (செம்பியன் செல்வன்), அண்ணா (சிதம்பரபத்தினி), வெகுளி (மருதமுனை மஜீத்), உறுதி (கோபதி), வேள்வி (ரா.பாலகிருஷ்ணன்), யாருக்குப் பெருமை? (சுசீலன்), நீரோடை (செ.பரமசாமி), இந்தோ-சீனி பாய் பாய் (மணிமேகலை) ஆகிய ஒன்பது பரிசுபெற்ற சிறுகதைகளை இத் தொகுப்பில் உள்ளடக்கியுள்ளனர். இத்தொகுப்பு வெளியான வேளையில் (1963இல்) இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக சீ.ஸ்ரீநிவாசனும், உப தலைவர்களாக கனக செந்திநாதன், தி.ச.வரதராசன் (வரதர்), மு.செல்லையா ஆகியோரும், செயலாளராக இ.மகாதேவாவும் (தேவன்-யாழ்ப்பாணம்), துணைச் செயலாளராக சிற்பி சி.சரவணபவனும், பொருளாளராக சு.வேலுப்பிள்ளையும் பணியாற்றியிருந்தனர். செயற்குழு உறுப்பினர்களாக செங்கை ஆழியான் குணராசா, இ.முருகையன், எம்.எம்.மக்கீன், க.தி.சம்பந்தன், விடிவெள்ளி க.பே.முத்தையா, சி.செல்லத்துரை, நீலாவணன் கே.சின்னத்துரை, தில்லைச்சிவன் (த.சிவசாமி) ஆகியோர் பணியாற்றியிருந்தனர்.

ஏனைய பதிவுகள்