ந.மயூரரூபன். யாழ்ப்பாணம்: எழு கலை இலக்கியப் பேரவை, 1வது பதிப்பு, பங்குனி 2016. (நெல்லியடி: பரணீ அச்சகம்).
(16), 17-88 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-3932-00-6.
இந்நூலில் ‘பாம்பின் காலம் ஒன்று’ என்ற முதலாவது பிரிவின் கீழ் தேவியின் ஆசைகளும் அதற்கான மொழிபெயர்ப்பும், தேங்காய்ச் சொட்டு, பசியடங்கா இருள், பெத்தாச்சி ஆகிய கதைகளும், ‘பாம்பின் காலம் இரண்டு’ என்ற பிரிவில் மரக்கட்டைகள், மரத்தில் தொங்கும் பாம்பு, என்னைப் பற்றிய பிற்குறிப்பு, அணங்கு, ஒரே வானம் ஆகிய கதைகளும், ‘பாம்பின் காலம் மூன்று’ என்ற பிரிவில் பூக்குஞ்சு, பூனை, வெளிக்கிட்டிட்டன் ஆகிய கதைகளுமாக மொத்தம் 12 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கரவெட்டி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ந.மயூரரூபன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் சமூகவியல் பட்டதாரி. 1999ஆம் ஆண்டில் இருந்து சிறுகதை, கவிதை, விமர்சனம், சமூகவியல், நாடகம் என்று பல துறைகளில் இயங்கி வருகின்றார். இவரது சிறுகதைகள் காலத்தின் குரலை ஒவ்வொரு காலத்திற்குமுரிய குறியீட்டுப் பேசுமுறையோடும் கவித்துவத்தின் வீச்சோடும் பதிவுசெய்கின்றன.