15738 மருத்துவர்களின் மரணம்.

இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதன். யாழ்ப்பாணம்: எழு கலை இலக்கியப் பேரவை, அம்பலவாணர் வீதி, உடுவில் கிழக்கு, சுன்னாகம், 1வது பதிப்பு, ஜுன் 2017. (யாழ்ப்பாணம்: போஸ்கோ அச்சகம், 252 பருத்தித்துறை வீதி, நல்லூர்).

xii, 80 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20×15 சமீ., ISBN: 978-955-7842-01-1.

1972 முதல் எழுத்துலகில் தடம்பதித்து வந்த அமரர் இணுவையூர் சிதம்பர திருச்செந்திநாதனின் சிறுகதைத் தொகுப்பு இது. இணுவில் கிழக்கைச் சேர்ந்த இவர் தம்பையா சிதம்பரநாதன் என்பவரின் மூத்த புதல்வராவார். இணுவில் சைவமகாஜன வித்தியாசாலையில் கற்கும் போதே எழுத்துலகில் பிரவேசித்தவர். நாளேடுகளுக்கும், சஞ்சிகைகளுக்கும் கட்டுரைகள் எழுதிப் பிரபலமடைந்தவர். இவர் ஒரு வணிகவியல் பட்டதாரி. 1972 ஆம் ஆண்டிலிருந்து வீரகேசரி, ஈழநாதம், சுடர், சிரித்திரன் போன்ற சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் எழுதி வந்துள்ளார். கிட்டத்தட்ட ஐம்பது கதைகளை வீரகேசரியில் மாத்திரம் எழுதியுள்ளார். இவர் 1985களில் யாழ்ப்பாணக் கலாச்சாரக் குழு வெளியிட்ட எக்காளம் சஞ்சிகை, 1986 இல் வெளியான ஈழமுரசு வாரமலர், அமிர்தகங்கை போன்றவற்றில் இணைந்து பணியாற்றியுள்ளார். தன்னுடைய அருமை மனைவியின் திடீர் இழப்பில் அவரை மையப்படுத்தி ‘மருத்துவர்களின் மரணம்’ என்ற இந்நூலை தனது இறுதி எழுத்தாகக் கொண்டு வந்தவர் இவர். பெறுமதி, கண்கள் இரண்டும் விற்று, அன்புள்ள அப்பா நாங்கள் நலம், அட…!, எல்லாம் வல்ல பரம்பொருளே, இத்தால் சகலரும் அறியவேண்டியது என்னவென்றால், புதையல், மருத்துவர்களின் மரணம், அம்மா வழியில் அல்ல, வாழ்தல் என்பது ஆகிய 10 சிறுகதைகளை இத்தொகுப்பு உள்ளடக்குகின்றது. வெளிச்சம் சஞ்சிகை உட்பட இவரின் எழுத்துகள் இடம்பிடித்த போது ஈழ தேச விடுதலையில் மிகுந்த தீவிரப் போக்கோடு இயங்கியவர். போர்க்காலத்தில் வன்னிக்கு இடம் பெயர்ந்து அங்கிருந்தும் தன் எழுத்துப் பணியைத் தொடர்ந்தவர். இவரது இலக்கிய ஆக்கங்கள் சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.  போர் முற்றிய காலத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தவர் போர் முடிவுற்ற பின்னர் புனர்வாழ்வு மையத்தில் இருந்து மீண்டு, சமீப ஆண்டுகளில் ‘தளவாசல்’ என்ற கலை இலக்கியக் காலாண்டிதழை வெளியிட்டு வந்த இவர் தனது 66 ஆவது வயதில் 15.10.2018 அன்று காலமானார்.

ஏனைய பதிவுகள்

Call of the Colosseum Mobile Slot Remark

Content Weekly Strategy “Twist And you will Win” Payment Information Spinions Christmas Try web based casinos court within the NZ? Villento Local casino Incentives Label