15740 மாசெ: எதிர் விசாரணை.

த.மலர்ச்செல்வன். மட்டக்களப்பு: மறுகா பதிப்பகம், உள்வீதி, ஆரையம்பதி-3, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2018. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

xi, (2), 109 பக்கம், விலை: ரூபா 480., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-50710-2-4.

த.மலர்ச்செல்வன் எழுத்து மாற்றம் கொள்ளப்பட்ட 90களில் முகிழ்ந்த படைப்பாளி. மாற்றுக் கருத்தாடல்களையும், புதிய மொழிக் கூறுகளையும் சிறுகதைகளில் நகர்த்திய ஒரு சிலரில் இவரும் ஒருவர். இதுவரை பெரிய எழுத்து (சிறுகதைத் தொகுப்பு), தனித்துத் திரிதல் (கவிதைத் தொகுப்பு) போன்ற பிரதிகளை வெளியிட்டவர். இந்நூலில் இவர் எழுதிய முதலாம் பாட்டத்திற்குப் பின் பெய்த இரண்டாவது மழை/ மண்டையனின் மரணக் கதை/ மூன்று படுகளத்துடன் தேடுபவன்/ எம்.பி.சூர்ப்பனகையின் இறுதி அத்தியாயம்/ காடேறிகளின் மாநாடு/ தூ.. பால்குடியனும் இன்னும் சிலரும்/ மாசெ. எதிர்-விசாரணை அறிக்கைகளும், தீர்வுகளும், ஆலோசனைகளும்/தக்கையனின் நாட்குறிப்பேட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நான்கு கதைகள் ஆகிய ஒன்பது கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்