யாழ். வளாக மாணவர்கள்-மாலையின் ஐவர். யாழ்ப்பாணம்: இலங்கைப் பல்கலைக்கழகம்- யாழ்ப்பாண வளாகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1978. (மானிப்பாய்: சிவகௌரி அச்சகம், கட்டுடை).
(4), 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
மு.இராஜரத்தினம் (பதுளையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். விஞ்ஞான பீடத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்), மு.திருநாவுக்கரசு (வரலாற்றுத் துறை மாணவர்), வல்வை ச.பாலசுப்பிரமணியம் (விஞ்ஞான பீட மூன்றாம் ஆண்டு மாணவர்), அ.வரதராஜன் (யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கலைப்பீட மாணவர்), அகளங்கன் (வவுனியா-பம்பை மடுவை பிறப்பிடமாகக் கொண்டவர். விஞ்ஞான பீட மூன்றாம் ஆண்டு மாணவர்) ஆகிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் எழுதிய சிறுகதைகள். ஆசைகள் நிராசைகளாகின்றன, மேளம், அப்பாவி ஆத்துமாக்கள், சேவல்களும் கோழிகளும், மீண்டும் கோழையாய் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட ஐந்து கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.