ஏ.சி. ஜரீனா முஸ்தபா. மவுண்ட் லவீனியா: பூங்காவனம் இலக்கிய வட்டம், 21 ஈ, ஸ்ரீ தர்மபால வீதி, கல்கிசை, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு: ஆர்.எம். பிரின்டர்ஸ்).
96 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-7775-03-6.
சிதறிய நம்பிக்கைகள், நலவுக்குக் காலமில்லை, சமூகமே உணர்வாயா, அதிர்ஷ்டம், இந்தக் கல்லிலும் ஈரமா?, மர்மயோகி, அமெரிக்க மாப்பிள்ளை, நட்பு இதுதானா?, மீண்டும் ஒரு வசந்தம், ஈகோ, அடைக்கலம், தென்றலின் தாக்கம், அந்தப் பயங்கர இரவு, ஆகிய 13 சிறுகதைகளை உள்ளடக்கிய தொகுப்பு. ஓர் அபலையின் டைரி என்ற தனது முதலாவது தொடர்கதையை மித்திரன் பத்திரிகையின் வாயிலாக பிரசுரித்த ஏ.சி. ஜரீனா முஸ்தபா, பின்னர் அதனை தனது முதலாவது நாவலாகவும் 2008இல் வெளியிட்டிருந்தார். இது நான்கு பதிப்புகள் வரை இன்றளவில் கண்டுள்;ளது. அதைத் தொடர்ந்து முப்பத்தேழாம் நம்பர் வீடு (நாவல்), ரோஜாக்கூட்டம் (சிறுவர் கதைகள்), பொக்கிஷம் (கவிதைத் தொகுப்பு), யதார்த்தங்கள் (சிறுகதைத் தொகுப்பு) என தொடர்ந்து பல நூல்களை எழுதி வருகின்றார். மீண்டும் ஒரு வசந்தம் இவரது எட்டாவது நூலாகும். சிங்கள மொழியில் கல்வி கற்றிருந்த போதிலும் தமிழ் மொழி மீது கொண்ட பற்றின் காரணமாக தமிழ் இலக்கியத்துறையில் ஆழக்கால் பதித்து தனக்கென்றொரு வாசகர் வட்டத்தைக் கொண்டிருப்பவர் இவர்.