15744 முக்காடு.

வை.அஹ்மத் (மூலம்), A.P.M இத்ரீஸ் (பதிப்பாசிரியர்). வாழைச்சேனை 05: உயிர்ப்பைத் தேடும் வேர்கள், மஹ்மூத் ஆலிம் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2000. (கொழும்பு 6: புதிய கார்த்திகேயன் அச்சகம்).

xx, 124 பக்கம், விலை: ரூபா 150.00, அளவு: 21×15 சமீ.

இத்தொகுப்பில் அமரர் வை.அஹ்மத் எழுதிய அடித்த கரங்கள், உப்புக் கரித்தது, நிறங்கள், பிறழ்வு, சின்ன மீனும் பெரிய மீனும், வெறி, முக்காடு, ஓ அதனாலென்ன, புன்னகை, கணை, போராட்டம், மணக்கோலம், மனிதன் வந்தான், மதியம் தப்புகிறது, ஒரு குடிசை அழிகிறது, இந்தப் புயலுக்குப் பின்னும், ஒரு புதிய காலை மலர்கிறது, உம்மா, தண்ணீர் தண்ணீர், புனித பூமியில், ஓய்வு, மாறும் மனங்கள், இங்கேயும் ஒரு மனிதன், முள்வேலிகள், மாணவம், தந்தையும் தாயும் பிள்ளைகளும் ஆகிய தலைப்பில் எழுதப்பட்ட 26 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21593).

ஏனைய பதிவுகள்