M.P.M நிஸ்வான். பாணந்துறை: எம்.பி.எம். நிஸ்வான், ரஹ்மத் பதிப்பகம், 6A, யோனக மாவத்தை, வத்தல்பொல, கெசெல்வத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (பாணந்துறை: ஏ 4 ரு அச்சக இல்லம்).
78 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-38956-0-8.
இந்நூலில் பிறை காண்போம், இருள் அகன்றது, இன்பத் திருநாள், குர்பானிய இறைச்சி, மை வெளிச்சம், டியுஷன் மெஷின், தெளிவு, பக்காத் திருடன், திருவிளையாடல், ஆட்டோ டிரைவர், மாற்றீடு, கண் திறந்தது ஆகிய பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. கலாபூஷணம் M.P.M. நிஸ்வான் அவர்கள், இதுவரை ரமழான் என்ற தொகுப்பையும், மூன்றாம் தலாக், குற்றமும் தண்டனையும் ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளையும் மரணத்துக்கு முன் மரணியுங்கள் என்ற கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். மை வெளிச்சம் இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பாகும். தனது ஆசிரியர் தொழிலின் மூலம் தான் பெற்ற அனுபவங்கள், பின்னர் காதியாக கடமையாற்றியபோது பெற்ற அனுபவங்கள் என்பவற்றின் பினனணியில் இக்கதைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.