வஸீலா ஸாஹிர். சென்னை 600102: பூவரசி வெளியீடு, C-63, 1ஆவது தளம், 1வது மெயின் ரோடு, அண்ணாநகர் கிழக்கு, 1வது பதிப்பு, டிசம்பர் 2016. (சென்னை 600102: பூவரசி வெளியீடு, C-63, 1ஆவது தளம், 1வது மெயின் ரோடு, அண்ணாநகர் கிழக்கு).
(9), 10-80 பக்கம், விலை: இந்திய ரூபா 100., அளவு: 22.5×15 சமீ., ISBN: 978-93-81322-37-6.
பூவரசி வெளியீட்டகத்தின் 58ஆவது நூல் இது. இதில் வஸீலா ஸாஹிர் எழுதிய மௌனத்தின் இருட்டு, எதிர்பார்ப்பு, என் ஒளி, குலாவும் நிலா, மொழியின் மரணம், மு(பு)துமை, வேரில் துடிக்கும் இதயங்கள், அவள் ஒரு தொடர்கதை, பாதி உயிரே ஆகிய ஒன்பது சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. வஸீலா ஸாஹிரின் சமூகப் பார்வைக்குள் வசப்பட்டிருப்பவை பெரும்பாலும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அவர்களின் மன வலிகளுமே. அவற்றை தன் எழுத்தின் மூலம் பிரதிபலிக்கச் செய்திருக்கிறார்.