ஏ.சீ.ஜரினா முஸ்தபா. மாவனல்ல: எக்மி பதிப்பகம், 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (மாவனல்ல: ஸ்மார்ட் ஓப்செட் பிரின்டர்ஸ், 125, பிரதான வீதி).
xii, 83 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-1825-06-5.
1985இல் ஏ.சீ.கமருன் நிஷா என்னும் பெயரில் தமிழ் எழுத்துலகில் நுழைந்த இந்த இஸ்லாமிய பெண் படைப்பாளியின் ஐந்தாவது நூலாக இச் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. இதுவரை ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, 37ஆம் நம்பர் வீடு, ஆகிய மூன்று நாவல்களும் ரோஜாக் கூட்டம் என்ற சிறுவர் கதை நூலும் ஏற்கெனவே பிரசுரமாகியுள்ளன. நான்கு நூல்களை எழுதிய இவர் தனது ஐந்தாவது நூலாக இச்சிறுகதைத் தொகுப்பினை வழங்கியிருக்கிறார். சிங்களத்தைத் தன் கல்விமொழியாகக் கொண்டிருந்தபோதும் தமிழில் புலமையை வளர்த்துக்கொண்டவர் இத்தமிழ்ப் பற்றாளர். இத்தொகுப்பில் இவர் எழுதிய யதார்த்தங்கள், கரைந்து போகின்ற மேகங்கள், பேரக் குழந்தை, ஆயிஷாவின் ஆனந்தக் கண்ணீர், சந்தேகம், சிறகிழந்த பறவைகள், ஆனந்தத் தீபாவளி, ஆற்றோடு போனவள், மலருக்குக் காவல், உதயமாகும் உறவுகள், அரங்கேற்றம், இனி என்றுமே புது வருஷம்தான், கிறிஸ்துமஸ் பரிசு, பிரார்த்தனை ஆகிய சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன.