இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம். லண்டன்: ரிவர் தேம்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், 47,நோர்மன் அவென்யூ, லண்டன் N22 5ES, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2019. (நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை).
287 பக்கம், விலை: ரூபா 600., அளவு: 21×14 சமீ.
அந்த இரு கண்கள், அந்தப் பச்சை வீடு (The Green House), இன்னுமொரு காதல், சின்னச் சின்ன ஆசை, மோகத்தைத் தாண்டி, த லாஸ்ட் ட்ரெயின், அக்காவின் காதலன், (காதலைச் சொல்ல) லண்டன்-கோயம்புத்தூர், லண்டன் 1995, ஓர் உளவாளியின் காதல், பரசுராமன், இப்படியும் கப்பங்கள் ஆகிய 12 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதிலுள்ள பெரும்பாலான கதைகள் தனி மனிதர்களின் குறிப்பாக பெண்களின் வாழ்க்கைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. சமுதாயத்தின் கட்டுமானங்கள், குடும்பம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட கௌரவ வேலிகளுக்குள் வாழும் வலிகள், அதை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கும் உள நோய் என்பனவும், பிரித்தானிய சமுதாயத்தில் வாழும் மக்களின் இணைவுகள், உறவுகள், அதனால் ஏற்படும் புரிந்ததும் புரியாதவையுமான சிக்கல்கள் போன்றவையும் இக்கதைகளுக்குள் இழையோடிக் கிடக்கின்றன. ராஜேஸ் பாலாவின் சிறுகதைகளுக்கான விரிவானதொரு முன்னுரையாக ‘என்னுடைய சிறுகதைகள் பற்றி’ என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 66971).