ஹனீபா சஹீலா. கிண்ணியா: ஹனீபா சஹீலா, ஆலிம் வீதி,1வது பதிப்பு, நவம்பர் 2012. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட் பிரின்டர்ஸ்).
viii, 9-67 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-54979-0-9.
அட்டாளைச்சேனையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாடசாலை ஆசிரியரான ஹனீபா சஹீலா தான் அவ்வப்போது எழுதிய பத்துச் சிறுகதைகளைத் தொகுத்த வெளியிட்டிருக்கிறார். விதி வரைந்த பாதை, கலங்காதே கண்மணி, உன்னோடு வாழாவிட்டால், கருவோடு கருகிய தாலி, நிம்மதியாகவே வாழ்ந்திருப்பேன், பாவம் இந்தப் பாவை இவள், கறுப்பு ஜுன், தீயில் கருகிய மொட்டு, மனதைத் திறந்த மடல், அமாவாசை பௌர்ணமியாகிறது ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. தலைப்புக் கதையில், காதலின் வலியை வார்த்தைகளால் வடித்திருக்கிறார். சுமையா என்ற கதாபாத்தரத்தின் வழியாக காதலின் புனித உணர்வு நம்மவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளதை தெளிவுபடுத்துகின்றார். பாவம் இந்தப் பாவை என்ற கதை ஹஸ்னாவின் சோகங்களை சொல்லில் வடித்திருக்கின்றது. தனது வறுமைநிலை காரணமாக வெளிநாட்டுக்குப் பயணமாகும் கதைக் கருவைப் பின்னணியாகக் கொண்டு இக்கதை எழுதப்பட்டுள்ளது. கறுப்பு ஜுன் என்ற கதை ஒரு உண்மைக் காதலைக் காட்சிப்படுத்தியிருக்கிறது. கௌதம் என்ற இளைஞன் தனது காதல் பற்றி சிந்து என்ற பெண்ணிடம் சொல்வதாகக் கதை நகர்த்தப்படுகின்றது. மனதைத் திறந்த மடல் என்ற கதை, சமூகத்தின் இருப்பு நிலையை எடுத்து விளக்குகின்றது. ஹனீபா சஹீலா தான் நல்லதொரு கதைசொல்லி என்பதை அனைத்துக் கதைகளிலும் நிலைநாட்டிச்செல்கிறார்.
மேலும் பார்க்க: அம்மா:அமரர் அன்னலட்சுமி யேசுதாசன் நினைவு வெளியீடு. 15882