ஐயாத்துரை சாந்தன் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2016. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(11), 12-104 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 23×15.5 சமீ., ISBN: 978-955-30-7567-3.
இத்தொகுதியிலுள்ள கதைகள் இத்தாலி, ஈராக், பாலஸ்தீனம், அமெரிக்கா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ், ருஷ்யா, கென்யா, தென்ஆபிரிக்கா, கினி, ஜப்பான், மெக்சிக்கோ, ஜமெய்க்கா, மங்கோலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவை. உலகறிந்த படைப்பாளிகளின் கருத்தியல் கலையானவை, உத்தி, உருவம், உள்ளடக்கம் என்பனவற்றில் புது முனைப்புகளையும் காட்டுபவை. ஆங்கில மொழியின் வழியாகத் தமிழுக்கு இக்கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதில் போர், உயில், கறுப்பு இராச்சியம், யாழிசை, எலுமிச்சைத் தோட்டம், எல்லைகள், மழைக்கு முன், குடை, வரும் புயல், பழைய வாளி, மௌ, வகுப்பு ஒரு விரலசைவில், பஸ் பயணம், ஆப்பிரிக்கப் பையன், தொடர்பு, எழுதாத கொள்கை, என் முதல் வாத்து ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட 18 கதைகள் இதில் அடங்கியுள்ளன.