15753 கிழக்கினை எதிர்கொண்டு: மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்.

கெகிறாவ ஸுலைஹா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

viii, 128 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-63-4.

இந்நூலில் என் பிரபுவே அந்தக் குழந்தை (மூலம்: ரவீந்திரநாத் தாகூர்), கிழக்கினை எதிர்கொண்டு (மூலம்: பேட் கார்), அந்தச் சிறுவனே குற்றவாளி (மூலம்: நாசிர் ஜெஹாங்கீர்), எதிரி (மூலம்: அப்துல் கனி பெக் அத்தார்), நான் இன்னும் உயிருடனிருக்கிறேன் (மூலம்: நயீமா அகமட்), அந்தத் திறந்த ஜன்னல் (மூலம்: ஸாகி), ஒரு கோப்பைத் தேநீர் (மூலம்: காத்தரீன் மான்ஸஃபீல்ட்), குரங்குகள் (மூலம்: புன்யாகாந்தி விஜேநாயக்க), உமரு (மூலம்: சீதா குலதுங்க), கடவுளுக்கோர் கடிதம் (மூலம்: கிரிகோரியோ ஃபியோன்டெஸ்), சிறுவர்கள் பெரியோரை விட புத்திசாலிகள் (மூலம்: லியோ டோல்ஸ்டோய்), சிட்டுக் குருவிகள் (மூலம்: கே.ஏ.அப்பாஸ்), இருபது வருடங்களுக்குப் பிறகு (மூலம்: ஓ ஹென்றி), அந்த சுயநலமிக்க இராட்சதன் (மூலம்: ஒஸ்கார் வைல்ட்), அந்த மகிழ்ச்சிகரமான இளவரசன் (மூலம்: ஒஸ்கார் வைல்ட்),  புலம்பல் (மூலம்: அன்டன் செக்கொவ்ஃப்) ஆகிய 16 பிறமொழிச் சிறுகதைகளை தமிழாக்கி ஆசிரியர் இந்நூலில் வழங்கியுள்ளார். இந்நூல் 174ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.

ஏனைய பதிவுகள்