ஜயத்திலக்க கம்மல்லவீர (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2013. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(14), 15-80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14சமீ., ISBN: 978-955-30-4401-3.
இந்நூலில் ஜயத்திலக்க கம்மல்லவீரவின் ஆ யூ ஓல்ரைட்?, செல்வி திருச்செல்வி, பொய் சொல்ல வேண்டாம், மனிதர்கள்-பேய்கள்-தெய்வங்கள், காரணமற்ற ஒரு கொலை ஆகிய ஐந்து சிங்களச் சிறுகதைகள் மொழிபெயர்த்துத் தரப்பட்டுள்ளன. இவை இனப் பிரச்சினையோடு நேரடியாகத் தொடர்புடைய சிறுகதைகள். இனப்பிரச்சினை எவ்வாறு கூர்மையடைந்தது? 1983 கறுப்பு ஜ{லை சம்பவங்கள், போர் நிறுத்தம், போருக்குப் பின்னரான சூழ்நிலைகள் என்பவற்றை மையமாகக் கொண்ட நான்கு சிறுகதைகளையும் மலையகத் தமிழர்களின் வாழ்க்கையில் இருந்து ஒரு சிறு அம்சத்தை உள்வாங்கி எழுதப்பட்ட ஒரு சிறுகதையும் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 65506).