சீமான் பத்திநாதன் பர்ணாந்து. மன்னார்: சீமான் பத்திநாதன் பர்ணாந்து, வங்காலை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: வரன் பிரின்டேர்ஸ், 50, கல்லூரி வீதி, நீராவியடி).
iv, 129 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-43624-3-7.
1964 மார்கழியில் ஏற்பட்ட கடற்சீற்றத்தை அடிப்படையாகக் கொண்டு புனையப்பெற்ற நாவல். 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட புயல் கரையை கடந்த போது இராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்தது. தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. இந்நாவல் அந்த வரலாற்றுப் பின்புலத்தில் நின்று எழுதப்பட்டுள்ளது. மன்னார் கடலோர மக்களின் வாழ்வியல் கோலங்களும், கற்பனைப் புனைவுகளும் கலந்த படைக்கப்பெற்ற விறுவிறுப்பான நாவல் இது. இந்நாவலுக்கு கலாசார அமைச்சினால், 2018இல் தேசிய சான்றிதழ் வழங்கப்பெற்றிருந்தது.