15761 இராசாத்தி: நாவல்.

முகில்வண்ணன் (இயற்பெயர்: வே.சண்முகநாதன்). கல்முனை: கண்மணி பிரசுரம், இலக்கிய பவன், நெசவு நிலைய வீதி, பாண்டிருப்பு-01, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

viii, 9-129 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×15.5 சமீ., ISBN: 978-955-38729-0-6.

கல்முனைப் பிரதேச மூத்த எழுத்தாளர்கள் வரிசையில் தனக்கென தனி இடம் பிடித்தவரான கலாபூசணம் முகில்வண்ணன் அவர்களின் 17ஆவது நூலாக வெளிவரும் நாவல் இது. 1990ஆம் ஆண்டு வீரகேசரி தேசிய பத்திரிகையில் தொடராக வெளிவந்த ‘இராசாத்தி உன்னைக் காணாத நெஞ்சு’ என்ற தொடர்கதையே ‘இராசாத்தி’ நாவலாகியுள்ளது. நாவலின் கதை 1981-1983 காலகட்டத்தில் போர் மேகம் வடக்கு-கிழக்கினைச் சூழும் ஆரம்ப காலத்தில் நிகழ்வதாகச் சித்திரிக்கப்படுகின்றது. இந்நாவல் பத்திரிகைத் தொடராக வெளிவந்த காலத்தில் நாட்டில்; தீவிரமடைந்து வந்த போராட்ட நிலைமையைக் கருத்தில் கொண்டு விடுதலைப் போராளிகள் பற்றிய சில பகுதிகளை ஆசிரிய பீடத்தினர் நீக்கியிருந்தனர். இன்று விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்டு பத்தாண்டுகள் கடந்த நிலையிலும்கூட அன்று நீக்கப்பட்ட பகுதிகள் சேர்க்கப்படாமலேயே ஆசிரியர் இந்நாவலை வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்