அ.ஸ.அஹமட் கியாஸ். அக்கரைப்பற்று 2: இலக்கியமாமணி அ.ச.அப்துஸ் ஸமது வெளியீடு, 228, பிரதான வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 1919. (அக்கரைப்பற்று-01: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்ட்).
xvi, 162 பக்கம், விலை: ரூபா 550.00, அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-44457-2-7.
ஈழத்து தமிழ் இலக்கியப்பரப்பில் அனைத்துத் துறைகளிலும் கால்பதித்து புகழ்பெற்ற நாடறிந்த எழுத்தாளர் மறைந்த அ.ஸ.அப்துல் ஸமதுவின் புத்திரன் சாஹித்ய மண்டலப் பரிசுபெற்ற எழுத்தாளர் பிரதிக் கல்விப்பணிப்பாளர் அ.ஸ.அஹமட் கியாஸ் எழுதிய மூன்றாவது நூலான ‘இனியெல்லாம் சுகமே’ என்ற இந்நாவல் வெளிவந்துள்ளது. ‘யன்னலைத்திற’, ‘எல்லாப் பூக்களுமே அழகுதான்’ என்ற கல்வித்துறை உளவியல் நூல்களைத் தந்த கல்வியியலாளர் எழுத்தாளர் அஹமட் கியாஸ் தற்போது ‘இனியெல்லாம் சுகமே’ என்ற இந் நாவலைத் தந்துள்ளார். ரேவதி, சகுந்தலா ரீச்சரரின் மாணவி. ரேவதிக்கு கலையார்வம் அதிகம். ஆனாலும் ரேவதியின் ஏனைய பாட ஆசிரியர்களும் அவளது தாயும் இதற்கு எதிரானவர்களாக இருக்கின்றனர். ரேவதி மருத்துவராக வரவேண்டுமென்பதில் அவர்கள் குறியாக இருந்தனர். இந்தப் பின்புலத்தில் நாவல் நகர்த்தப்படுகின்றது. கலையும் படிப்பும் குறித்த பல விவாதங்கள் இந்நாவலில் நிகழ்கின்றன.