ரூபன் சிவா (இயற்பெயர்: சிவலிங்கம் விஜியரூபன்). கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202, செட்டியார் தெரு, 1வது பதிப்பு, 2021. (கொழும்பு 11: பூபாலசிங்கம் புத்தகசாலை, இல. 202, செட்டியார் தெரு).
xiv, 211 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 22×15 சமீ., ISBN: 978-624-5582-02-0.
கொரோனா (கோவிட் -19) முடக்கத்தை வெற்றிகரமான இலக்கிய முயற்சியாக்கத் துணிந்த எழுத்தாளர் ரூபன் சிவாவின் மனதில் 30.04.2020 அன்று முளைவிட்ட கூட்டு முயற்சி இது. ஒரு நாவலின் முதலாம் அத்தியாயத்தை அவர் எழுத அதனை கஸ்தூரி மாசிலன்(பின்லாந்து), பொலிகையூர் கோகிலா (பிரான்ஸ்) ஆகியோர் அத்தியாயங்களாகத் தொடர மேலும் பல படைப்பாளிகளும் இணைந்து மொத்தம் 20 படைப்பாளிகளின் பங்களிப்புடன் இந் நாவலை வளர்த்துச் சென்று முடித்துவைத்துள்ளார்கள். மரதன் ஓட்டமாகத் தொடர்ந்த இது ஒரு அழகான குடும்பக் கதை. எமது வாழ்வியல், கலாச்சாரம், அன்பு, காதல், வலி, வேதனைகள், இன்பங்கள், வெளிநாட்டு பயணங்களின் தடைகள், இப்படியான பல உண்மையான விடயங்களைத் தான் இந்நாவலும் பேசுகின்றது. ரூபன் சிவா, கஸ்தூரி மாசிலன், சுசிதா ரகு, ரொபின் சியா, சரளா விமலராஜா, குடத்தனை உதயன், கீதா பரமநாதன், யோ.புரட்சி, கௌரி சுந்தரம், அனுராஜ், லெட்சுமணன் முருகபூபதி, முல்லை நாச்சியார், சத்யா ஸ்ரீராம், இணுவை சக்திதாசன், உமாகரன் இராசையா, தாட்சாயணி, ஜீவகுமாரன், லதா உதயன், நக்கீரன் மகள், பொலிகையூர் கோகிலா ஆகியோர் இந்த மரதன் தொடரில் பங்கேற்றுள்ளனர்.