சிவ.ஆரூரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
vi, 140 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-0958-58-0.
‘ஈழத்து இலக்கிய உலகிற்கு கிடைத்த புதையல்களில் சிவ. ஆரூரனும் வியக்கத்தக்க புதையல். சிறுகதை, நாவல் என ஆக்க இலக்கியத்தில் உச்சநிலைப் படைப்பாளியாக விளங்கி வருகின்ற சிவ. ஆரூரன் தமிழ்ச் சூழலில் பேசப்படவேண்டிய பாலியல் பிரச்சினையை இந்நாவல் வழியாக வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் கலாசாரத்திற்கும் பண்பாட்டிற்கும் கட்டுப்பட்டு வாழுகின்ற ஒரு கணவன் மனைவியிடையேயான பாலுணர்வுக் குழப்பத்தை எந்தவித ஆபாசமும் இன்றி மிக அழகாக இந்நாவல் மூலம் வெளிப்படுத்தி உள்ளார். அன்பும், விட்டுக்கொடுப்பும் பரஸ்பர புரிந்துணர்வும் இருந்தால் கணவன் மனைவியிடையிலான உறவில் எந்த சிக்கல்களும் வராது என்பதை இந்த நாவலை வாசிப்பவர்கள் உணர்ந்து கொள்வார்கள். பொதுவாக ஆண்மைக் குறைபாடு உடைய ஆண்களைப் பற்றிய பல நாவல்களை தமிழ் பேசும் இலக்கிய உலகம் தந்துள்ளது. ஆனால் இந்த நாவல் எதிர் மாறானது. இருப்பினும் ஆண் – பெண் இடையே நிபந்தனையற்ற அன்பு காணப்படுமாயின் அவர்கள் வாழ்வு என்றும் இன்பமே என்பதை வெளிப்படுத்தும் இனிய நாவல். இந்த நாவலில் வருகின்ற அனுசியா போன்ற அன்பைச் சொரியும் பெண், மனைவியாகக் கிடைத்தால் எந்த ஆணுக்கும் வாழ்நாள் என்றுமே இனிமை தான்’ (க.பரணீதரன், வெளியீட்டுரையில்). இந்நூல் 175ஆவது ஜீவநதி வெளியீடாக வெளிவந்துள்ளது.