15770 கல்லெறிபட்ட கண்ணாடி (சமூக குறுநாவல்).

ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-01, திருப்பழுகாமம், பெரியபோரதீவு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி).

110 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7300-04-7.

பல்வேறு காரணங்களால் குடும்ப வாழ்வை முறித்துக்கொள்ளும் பெற்றோர்களையும், அதுவரை அவர்களை நம்பிக் குடும்பமாக வாழ்ந்து வந்த பிள்ளைகள், பெற்றோரின் பிரிவால் அடையும் துயர வாழ்க்கையையும் பின்னணியாகக் கொண்ட இக்குறுநாவல் 1965 காலப்பகுதியில் எழுதப்பட்டது. இந்நாவலின் கருவூலம் பின்தங்கிய ஒரு கிராமத்தையும் அதன் கடைக்கோடியான தொலைதூர வயல்வாடி வட்டைகளைச் சுற்றிச்சுற்றி வருகின்றது. இதனிடையே கதுறுவலைக்கும் கால் நீட்டுவதும், அடுத்தடுத்து சோகத்தையும் சோதனைகளையும் இழப்பகளையும் சந்திக்கும் கிராமிய கூட்டுக்குடும்பம் ஒன்றின் வாழ்க்கையை ஆசிரியர் படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். மூவின மக்களின் ஒற்றுமையை தனது கதைகளின் மூலம் வலியுறுத்துவது ஆ.மு.சி.வேலழகனின் தனித்துவப் பண்பாகும்.

ஏனைய பதிவுகள்