15771 கனா காணும் காலம்.

ரதி தனஞ்செயன். திருக்கோணமலை: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாணம், 1வது பதிப்பு, 2017. (மட்டக்களப்பு:  வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).

92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-4628-47-2.

மட்டக்களப்பு ஆரையம்பதியைச் சேர்ந்த திருமதி ரதி தனஞ்செயனின் கன்னி முயற்சியாக இந்நாவல் வெளிவந்துள்ளது. காதலை மையமாகக் கொண்ட இந்நாவலினூடாக மனித உறவுகளின் பல்வேறு பரிமாணங்களும் வெளிப்படுத்தப்பட்டிருப்பதனை காணலாம். நாயகி ‘திவ்யா”வின் பாத்திரம்  எமது பண்பாட்டிற்கு ஏற்புடையதா? இப்படி ஒரு பெண் இருக்கமுடியுமா? என்ற வாதங்களுக்கு அப்பால் இலட்சிய நோக்கில் யதார்த்தமான வாழ்வியலை இந்நாவல் சித்திரித்துள்ளது. ‘கண்ணீர் நாயகி’யான திவ்யாவின் வாழ்வில் அவள் சந்தித்த அவலங்கள், சோதனைகள் என்பன அவளைப் புடம் போட்டு புதிய வார்ப்பாக்கிவிடுகின்றது. பாத்திரங்கள் வெகு இயல்பாக உரையாடுகின்றன. சம்பவச் சித்திரிப்புகள் திரைப்படமொன்றை பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகின்றது.

ஏனைய பதிவுகள்

Best Online Casinos In Malta

Content What Should I Do If I Suspect I Have A Gambling Problem?: the site Aviator Launch Experience The Thrill Of Aviator At Betway Casino