ரவி (இயற்பெயர்: பா.ரவிந்திரன்). கோயம்புத்தூர் 641015: விடியல் பதிப்பகம், 23/5, ஏ.கே.ஜீ.நகர், 3வது தெரு, உப்பிலிபாளையம் அஞ்சல், 1வது பதிப்பு, ஆவணி 2020. (சென்னை: ஜோதி என்டர்பிரைசஸ்).
224 பக்கம், விலை: இந்திய ரூபா 180., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-81-89867-24-5.
‘தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்’ (PLOTE) என்ற இயக்கத்திற்குள்ளே 1984-1985 காலகட்டத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், நாவல் வடிவிலே இந்த நூல் புனையப்பட்டுள்ளது. அந்த இயக்கத்தில் அக் காலத்திலே இணைந்து செயற்பட்ட இந்த நூலின் ஆசிரியரான திரு. ரவி, தற்போது சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவருகிறார். ஈழ விடுதலைப் போராட்ட முன்னெடுப்புகளின் அக முரண்களை, விபரீதங்களைப் பதிவுசெய்யும் ஆவணமாகக் கருதப்படுகிற நூல் இது. தன் இளமைக்காலத்து நம்பிக்கைகளின் மேல் விழுந்த ஒவ்வொரு அசைவுகளையும் தன் இறந்த காலத்தின் மேல் நின்றுகொண்டு, எதிர்காலச் சமூகத்திடம் பேசுகின்ற ஓர் இலக்கிய வடிவமாக ‘குமிழி’ எம்மை அடைகின்றது. இலகுவான மொழி, குழப்பம் இன்றிக் கதை நகர்த்தல், வார்த்தை நாகரீகம் என அனைத்திலும் ஆசிரியர் கவனமாகவே பயணம் செய்கிறார்.