15778 செவ்வாயில் அகதிகள்: விஞ்ஞானப் புனைகதை.

எம்.எஸ்.எம். ஜிப்ரி. பொல்கஹவெல:  எம்.எஸ்.எம்.ஜிப்ரி. 58/3 எஸ். எம். சுபியான் மாவத்தை, பண்டாவ, 1வது பதிப்பு, 2015. (பொல்கஹவெல: ஏ.பீ.சீ. பிரின்டர்ஸ்).

100 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×16 சமீ., ISBN: 978-955-42392-0-3.

இநநூலாசிரியர் எம்.எஸ்.எம். ஜிப்ரி, குரநாகல் மாவட்டத்தில் பொல்கஹவெலவைச் சேர்ந்தவர். ஆசிரியராக, ஆசிரிய ஆலோசகராக, விஞ்ஞான போதனாசிரியராக கடமையாற்றி ஓய்வுபெற்றவர். முன்னர் ‘அபோபிஸ்” என்ற விண்கல் பற்றிய புனைகதையை வழங்கியவர். இது இவரது இரண்டாவது படைப்பாகும். இறுதிக் கருத்தரங்கு, கேள்வி நேரம், பயணத்திற்குத் தயாராதல், கச்சதீவு ரொக்கட் ஏவுதளம், ஜம்போ டிஸ்கவரி புறப்படுதல், மெடி மாஸ்டர், பூச்சியப் புவியீர்ப்புச் சூழல், அபொபிஸ் விண்கல அநர்த்தம், காலை உணவு, ஈர்ப்பு விசை ஒழுங்காக்கி, சிகிச்சை, யூரி ககாரின் இன், நனோகிட், பத்திரிகைச் செய்திகள், இறைவனின் இருப்பிடம், இயற்கைச் சமநிலை, சந்திரனில் இறங்குதல், பொதுத் தேர்தல் வாக்களிப்பு, பூஞ்சோலையும் விவசாயப் பண்ணையும், தொழிற்சாலைகளைப் பார்வையிடல், பகற்போசனமும் சந்திரனில் இருந்து புறப்படுதலும், எல்லையில்லா விண்வெளி, அகதியின் மறு உலகப் பயணம், செவ்வாயில் தரையிறங்குதல், மனை வழங்கும் நிகழ்வு, ஜம்போ டிஸ்கவரி கச்சதீவை நோக்கிப் புறப்படல், செவ்வாய் பற்றிய தகவல்கள் ஆகிய அத்தியாயங்களினூடாக இவ்வளரிளம் பருவத்தினருக்குப் பொருத்தமான விஞ்ஞானப் புனைவு வளர்த்துச் செல்லப்படுகின்றது.

ஏனைய பதிவுகள்