வண.சகோதரர் வ.அல்போன்ஸ். யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை, 1வது பதிப்பு, நவம்பர் 1925. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை).
iv, 148 பக்கம், விலை: 40 சதம், அளவு: 18×12.5 சமீ.
அரண்மனைவாசம், அழகாபுரம், முதலாம் சதிமானம், தேவபராமரிப்பு, துருக்கன் வீடு, நியாயமில்லாத கவலை, காய்மகாரம், பாலியரின் பிரயாணம், இரண்டாம் சதிமானமும் ஆறாத்துயரும், புத்திரசோகம், கள்ள மனஸ்தாபம், அதிசய சம்பவம், எதிர்பாராத சந்திப்பும் துயர சம்பவமும், இராச்சிய வாஞ்சை, பரிதாப மரணமும் அநியாயமான குற்றச்சாட்டும், பயங்கரமான தேவதண்டனை, ஆனந்தக் கண்ணீர், மகுடதாரணம் ஆகிய 18 இயல்களில் இந்நாவல் விரிகின்றது. கடவுள் பக்தி, நல்லொழுக்கம், தேவதாயாரின் மேலான அணைகடந்த நம்பிக்கை, வேத அபிமானம் என்பவற்றைத் தூண்டும் நாவல். நூலாசிரியர், சங்கைக்குரிய வ.அல்போன்ஸ் விறதர் கொழும்புத்துறை சஞ்சூசையப்பர் சபைச் சன்னியாசிகளுள் ஒருவராவார்.