15780 தோற்றுப் போனவர்கள்: நாவல்.

சீமான் பத்திநாதன் பர்ணாந்து. மன்னார்: சீமான் பத்திநாதன் பர்ணாந்து, வங்காலை-05, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: வரன் பிறின்டேர்ஸ், 50, கல்லூரி வீதி, நீராவியடி).

viii, 160 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-43624-2-0.

1950களின் பகைப்புலத்தில் நிகழ்ந்ததாக இந்நாவல் எழுதப்பட்டுள்ளது. மன்னாரின் கரையோரப் பிரதேசங்களில் மீனவர் குடும்பங்களின் பின்னணியில் பாத்திரங்கள் இயல்பாக வார்க்கப்பட்டுள்ளன. மீனவர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளையும் அவற்றுக்கான பின்புலங்களையும் அவற்றின் வேரோடும் வேரடி மண்ணோடும் இந்நாவலாசிரியர் சித்திரித்துள்ளார். தமிழ் மீனவச் சமூகம் பிரதேச ரீதியாகவும் மதரீதியாகவும் சாதிரீதியாகவும் வெவ்வேறு பிரிவுகளாகப் பிளவுண்டு நின்றாலும் கூட அவர்கள் அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் சவால்களும் ஒரே மாதிரியானதாகவே உள்ளதை இந்நாவல் எமக்குப் புரியவைக்கின்றது. மீனவரிடையே பழக்கத்தில் உள்ள பாரம்பரியச் சொற்கள், இன்றும் மங்கிவிடாமல் வாய்மொழி வழக்கில் பேணப்பட்டுவந்துள்ள பழமொழிகள் மற்றும் மரபுத் தொடர்கள் முதலானவற்றை இந்நாவலில் போகிற போக்கில் கச்சிதமாகச் சிறைப்படுத்தியுள்ளார். நாவலில் பேசப்படுகின்ற தொழில்சார் பிரச்சினைகள், மதம் சார்ந்த நடைமுறைகள், அவற்றின் அமுலாக்கம் தொடர்பான கட்டுப்பாடுகள் போன்ற விடயங்களில் யதார்த்தமான ஒரு போக்கையே ஆசிரியர் கைக்கொண்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்

14894 கற்பகதேவி: பெருங்கதையிலோர் சிறுகதை.

ந.மயூரரூபன். பருத்தித்துறை: எழினி வெளியீட்டகம், 1வது பதிப்பு, சித்திரை 2017. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி). 60 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14.5 சமீ. அமரர் திருமதி கற்பகதேவி நவரத்தினம் (28.4.1945-22.3.2017)

15156 தமிழர் பண்பாட்டில் மார்கழி: ஒரு மரபுத் திங்கள்.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில்,1வது பதிப்பு, 2017. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி). viii, 65 பக்கம், விலை: ரூபா 200.,