15783 நிழலைத் தேடி: சமூக நாவல்.

இன்ஷிராஹ் இக்பால். ஒலுவில்: தமிழ்ச் சங்கம், இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, மார்ச் 2014. (மாவனல்ல: எம்.ஜே.எம். பிரின்டர்ஸ், 119, பிரதான வீதி).

x, 102 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21.5×16 சமீ., ISBN: 978-955-1825-12-6.

இந்நாவலாசிரியை இன்ஷிராஹ் சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்தவர். பிரபல ஈழத்து எழுத்தாளர் சுலைமா சமி இக்பாலின் மகள். தன் பாடசாலைக் காலத்திலேயே ‘பூமுகத்தின் புன்னகை’ என்ற சிறுகதைத் தொகுதியை வழங்கியவர். தற்போது தனது பல்கலைக்கழக காலத்தில் ‘நிழலைத்தேடி’ என்ற நாவலை வழங்கியிருக்கிறார். மானிட வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்ற நிலைக்கண்ணாடியாக இந்நாவல் அமைகின்றது. வாழ்வியல் சிக்கல்களையும் அதன் உயர்வையும் சிறுமைகளையும் மனித சமூகத்தில் உள்ள பாத்திரங்களைக் கொண்டு  மிக அற்புதமாக சிருஷ்டிக்கும் பணியை இப்படைப்பாளி ஆற்றியுள்ளார். முற்று முழுவதும் ஒரு பெண்ணைச் சுற்றிப் பின்னப்பட்ட கதைதான் இந்நாவல். பெண்ணென்பவள் மென்மையானவள். மேன்மையாளவள். அவளுக்குள் இருக்கும் உணர்வுகளை, கஷ்டங்களை, தியாகத்தை, இலட்சியத் தாகத்தை முடிந்தவரை உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிறார். ஒரு வகையில் பார்த்தால் பெண்ணின் இன்னொரு பக்கத்தைத் தொட்டுக்காட்டும் முயற்சி இது. இந்நாவல், உயர் கல்வி அமைச்சு நடாத்தும் வுயடநவெ நிகழ்ச்சி மூலம் தேசிய ரீதியில் முதல் பரிசினைப் பெற்றிருக்கிறது.

ஏனைய பதிவுகள்

Ny Verbunden Casinos 2024

Content Vortragen Sie Reichlich 6777 Kostenlose Spielautomaten Auszahlungsquoten Pro Jedweder Spielbank Spiele Meine 8 Kriterien Für jedes Die Selektion Ihr Besten Erreichbar Spielautomaten Dritter monat