புவனேஸ்வரி சுந்தரலிங்கம். வவுனியா: வவுனியா கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், 1வது பதிப்பு, ஜுலை 2019. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி).
x, 32 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-624-5000-22-5.
இக்கதையை நூல் ஆசிரியர் தான் கண்டதையும் கேட்டதையும் பட்டஅனுபவித்ததையும் கொண்டு, உணர்வு பூர்வமாகத் தனது கற்பனையையும் பொருத்தமான இடத்தில் கலந்து உருவாக்கியிருக்கிறார். இக்கதையின் கதாபாத்திரங்கள் பூமிப்பந்தின் எங்கோ ஒரு மூலையில் இன்றும் வாழ்ந்துகொண்டு இருக்கலாம். பாரதி கண்ட புதுமைப் பெண்களாக இக்காலப் பெண்கள் வாழத்தொடங்கி விட்டார்கள் என்கிறோம். ஆனாலும் சில விடயங்களில் அவர்கள் தான்தோன்றித் தனமாக நடந்து கொள்வதால் சமூக சீர்கேட்டுக்கு காரணமாகவும் அமைந்துவிடுகிறார்கள். பெண்கள் தமது ஆடை விடயத்தில் கவனமெடுப்பதில்லை. காலம்காலமாக இளமைக் காலத்தில் வாழ்விழந்த ஆணோ பெண்ணோ வயது முதிர்ந்த நிலையில் மறுமணம் புரிந்து வாழ்வைச் சீரழித்துக்கொள்கின்றார்கள். அவர்கள் மட்டுமல்லாது அவர்களது பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குவதில் கஷ்டப்படுகிறார்கள். அவர்களை சமூகததில் உயர்நிலைக்குக் கொண்டுவரமுடியாதவர்களாக சித்தியின் கொடுமை, சித்தப்பாவின் ஆளுமை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகின்றார்கள். மனமும் உடலும் சுயகட்டுப்பாட்டுக்குள் அமைந்தால் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து உயர்வடையலாம் என்பதை இந்நாவல் உணரத்துகின்றது.