கெக்கிராவ ஹஸ்னா. பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, 2020. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).
xii, 108 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-624-95932-0-6.
‘கெக்கிராவ ஹஸ்னா கெக்கிராவ முஸ்லிம் வித்தியாலயத்தில் தரம் 13இல் கல்வி கற்கும் மாணவியாவார். தன் சூழலில் தான் அனுபவித்தவற்றைப் பகுத்து, ஆராய்ந்த அதை சரியாகச் சொல்ல முடியாத வாலிபத்தின் விளிம்பில் இருக்கின்ற பல்லாயிரம் பிள்ளைகளுக்கு மத்தியில், இவ்வாறான இலட்சியக் கதைகள் ஒரு பள்ளிக்கூட மாணவியிடமிருந்து வருவதென்பது பெருமகிழ்வு தருவதாகும்’ (கெக்கிராவ ஸுலைஹா). இது 163ஆவது ஜீவநதி வெளியீடாகும்.