15791 மூங்கிலாகும் முட்புதர் (நாவல்).

மைதிலி தயாபரன். வவுனியா: கிருஷ்ணிகா வெளியீட்டகம், வேப்பங்குளம், 1வது பதிப்பு, நொவெம்பர் 2018. (வவுனியா: வாணி கணனிப் பதிப்பகம், இல. 85, கந்தசுவாமி கோவில் வீதி).

208 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-38691-1-1.

புலம்பெயர் பொருளாதாரத்தின் வருகையால், தமிழரிடையே தொலைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தொழல்சார் பொருளாதாரத்தின் இழப்பும் சுயதொழிற் திறமைகளின் மறைவும் எமது சமூகத்தில் பாரிய விளைவுகளைக் கண்டுள்ள இந்நேரத்தில், ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற முதுமொழியை வலியுறுத்தும் இந்நாவல், கடமையைத் தாண்டிய அர்ப்பணிப்பு என்பதை தெளிவாக விளக்கிப் புரியவைக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. இதில் மின்மார்க்கத்தை நிறுவிக்கொள்ளும் ஒரு பாதையாளரை (டுைநௌஅயெ) இக்கதையின் நாயகனாகக் காண்கிறோம். கடமையைத் தாண்டிய அர்ப்பணிப்பு என்பதை வெளிப்படுத்தவதற்கு அத்தொழில் பொருத்தமாகவே அமைகின்றது. அந்தத் தொழிலாளி தன் பாதையில் எத்துணை இடைஞ்சல்களைச் சந்திக்கிறார், எவ்வாறு தொழில்வாழ்விலும் குடும்ப வாழ்விலும் தியாகங்களைச் செய்கிறார்? எவ்வாறு வேலையையும் குடும்பத்தையும் சமப்படுத்துகின்றார்? எவ்வாறு முட்புதர்களைக் கடந்து செல்கிறார்? அந்த நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்யும்போது எவ்வாறு பண்படுத்தப்படுகிறார் என்றவாறாக அவரது வாழ்க்கைப் பயணம் இந்நாவலில் விரித்துச் சொல்லப்படுகின்றது. வவுனியா, கிருஷ்ணிகா வெளியீட்டகத்தினரின் ஒன்பதாவது நூலாகவும் மூன்றாவது நாவலாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது. மைதிலி தயாபரன், பொறியியலாளராக மின்சாரத்துறையில் பணியாற்றுகின்றார். இவரது 12ஆவது நூலாகவும் ஐந்தாவது நாவலாகவும் ‘மூங்கிலாகும் முட்புதர்” அமைந்துள்ளது.

ஏனைய பதிவுகள்

Omsättningsfri Bonus 2023

Content Dynamisk Spelautomater Om Free Spins Utan Insättning Free Spins Hos Svenska språke Casino På Webben Försöka Med Dagliga Erbjudanden Hos Ninja Casino Online Begagnad