தேவகாந்தன். சென்னை 600091: இலக்கு வெளியீடு, F3, ஸ்ரீ கணேஸ் ரோபல், இல. 2, பஜனை கோயில் வீதி, புழுதிவாக்கம், 2வது பதிப்பு, 2009, 1வது பதிப்பு, டிசம்பர் 1993. (சென்னை 78: தோழமை வெளியீடு, 5D, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர்).
(8), 9-303 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 22.5×15 சமீ.
தேவகாந்தனின் இரண்டாவது நாவலான இது நெய்வேலி வேர்கள் அமைப்பினரால் தொண்ணூறுகளில் முதலில் வெளியிடப்பெற்றது. பரவலாக வாசகர்களினதும் விமர்சகர்களினதும் கவனத்தைப் பெற்ற நாவல் அது. எடுத்துக்கொண்ட பொருளை ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின்புலத்தில், சரியாகச் சொன்னால் 1983இன் இனக் கலவர காலத்தின் பின்னணியில், வைத்து, வடக்கின் காந்தீயக் குடியேற்றத்திலிருந்த மலையக மக்களின் வாழ்வு சிதைந்த வரலாற்றை மிக நேர்த்தியாக ‘விதி’ எழுதியிருக்கின்றது. அவர்களின் புலம் பெயர்வு, வாழ்வவலம் போன்றவை மிகவும் அற்புதமாக இந்நாவலில் பதிவாகியிருக்கின்றது. ‘தொண்ணூறுகளில் தமிழ் நாவல்கள்’ என்ற நூலில் தொண்ணூறுகளில் வெளிவந்த குறிப்பிடத் தகுந்த நாவல்களில் ஒன்றாக கோவை ஞானியாலும் இது தேர்வாகியிருக்கிறது. அதன் இரண்டாம் பதிப்பு 2009இல் வெளிவந்தபோது நாவலின் போக்கிலுள்ள தளர்வினைப் போக்கும் வகையில் மீண்டுமொரு செம்மையாக்கத்தை ஆசிரியர் அதில் செய்திருப்பதாக பின்னொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.