15794 விமலா கூறும் செவிச்செல்வம்.

செ.கணேசலிங்கன். (சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது  தெரு, வடபழநி 1வது பதிப்பு, 2017. (சென்னை 600026: குமரன் பப்ளிஷர்ஸ், 12/3, மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, 7வது  தெரு, வடபழநி).

192 பக்கம், விலை: இந்திய ரூபா 90.00, அளவு: 18×12.5 சமீ.

விமலாவும் சகாதேவனும் கலைக் கல்லூரி மாணவர்கள். கலைகள் உள்ளுணர்வின் அறிவு. இசை, அழகைப் பற்றிச் சிந்திக்க வைத்தது. இவை மட்டுமல்ல. ஒருவருக்கு ஒருவர் இன்பம் தரும்-துன்பத்தை அகற்றும். இயற்கையிலிருந்து மனித இனம் சேகரித்து வாழும் ஆதி காலத்தில்;, உணவு, இருப்பிடம், குளிர்கால உடை பற்றியே சிந்தனையிருந்தது. உயிர் வாழ்வு பற்றியே முதன்மை பெற்ற காலம் அது. தண்ணீர் சேகரிக்க களிமண் குடம் தட்டிய ஒலி, இறைச்சி உண்டபின் தோலைத் தட்டும் ஓசை, வண்டரித்த மூங்கில் வழி வெளியேறும் காற்றொலி ஓசை யாவும் செவிச் செல்வமாயின. இயற்கையை மீறி, மனிதர் தாமே ஆக்கிய ஒலி, ஓசை இன்பத்தை நுகர்ந்து மகிழ்ந்தனர். இசை, கலைகள் மனிதன் படைப்பு. இதனைப் பலர் அறியார். அழகுணர்ச்சிக் கலைகள் பின்னாளில் மேம்படுத்தப்பட்டன. மற்றைய நுகர் பண்டங்களிலும் பார்க்க கலைகளை நுகர்ந்து, மகிழ்ச்சியடைந்தனர் ஒரு பகுதி மக்கள். சகாதேவன் கூலி அடிமைத் தொழிலில் ஈடுபடாது இசைக்குரிய உபகரணங்களை விற்கும் தொழிலிலும் ஈடுபடுகிறான். விமலா தன் ஒரே மகளை கூலி அடிமை தொழிலில் ஈடுபடுத்தாது இசையிலும் பாட்டனாரின் வணிகத் தொழிலிலும் ஈடுபட ஆர்வமூட்டுகிறாள். பரந்துபட்ட மக்கள் பண்பாட்டுக்கு இசை பயன்பட வேண்டும் என்பார் ஜேர்மன் சித்தாந்தவாதி அடனோர். இயற்கைக்கு மேலாக மனித இனம் கண்டுபிடித்த இசைக் கலைகளின் பலன், பரவலாக அனைத்து மக்களும் பயன்பெற வேண்டும் என சகாதேவனும் கூறுவான். (செ.கணெசலிங்கன், முன்னுரையில்).

ஏனைய பதிவுகள்