ஜே.எம்.சரத் தர்மசிரி (சிங்கள மூலம்), திக்குவல்லை கமால் (தமிழாக்கம்). கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 661/665/675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2016. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(11), 12-207 பக்கம், விலை: ரூபா 750., அளவு: 23×15 சமீ., ISBN: 978-955-30-7317-4.
இலங்கையில் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் (1820களில்) ஆரம்பித்த காரீயக் கைத்தொழில் சிங்களவர்களிடையே துரித வளர்ச்சி கண்டது. 19ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் இலங்கையில் சுமார் 3000 காரீயச் சுரங்கங்கள் இருந்ததாக குறிப்பிடப்படுகின்றது. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 20 வீதத்தை இக்கைத்தொழில் அக்காலத்தில் அரசுக்கு ஈட்டிக் கொடுத்தது. சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவதற்காக அப்போதைக்கு மிகவும் பாதுகாப்பான பிரதேசமான, சப்ரகமுவ மாகாணத்தின் காரீய அகழ்விடமொன்றை நாடி வரும் சவுந்திரிஸ் இக்கதையின் நாயகன். அங்கு ஏழைத் தொழிலாளியாகத் தனது வாழ்வை ஆரம்பிக்கிறான். அந்தப் பயணத்திலும் தனத புதிய தொழிலை மேற்கொண்டு செய்கையிலும் அவன் எதிர்கொண்ட சமூக, பொருளாதார, சமய, அரசியல் தாக்கங்களும், அதற்கான அவனது எதிர்வினைகளும், மாறிவரும் கடந்த யுகமொன்றின் ஏதோவொரு இருண்ட பக்கத்தை வெளிப்படுத்துவதன் மூலம் எமக்கு முக்கியமானதாகின்றது. அவனது எதிர்வினைகள் கடந்த காலத்தின் ஒரு வெட்டுமுகத்தை எமக்குத் திறந்து காட்டுகின்றது.