கனக. செந்திநாதன். யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்).
40 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18.5×12.5 சமீ.
இந்நூலில் இரசிகமணி அவர்களின் ‘வாழையடி வாழை’, ‘எட்டாம் மடை’ ஆகிய இரண்டு பாட்டிடையிட்ட உரைச் சித்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இலங்கை வானொலிக்காகத் தயாரிக்கப்பட்டவை இவை. வாழையடி வாழை 1973ஆம் ஆண்டில் பங்குனியிலும், எட்டாம் மடை அதே ஆண்டு ஆவணியிலும் வானொலியில் இவை ஒலிபரப்பப்பட்டன. இவ்வித உரைச் சித்திரங்கள் வெறும் உரைச் சித்திரங்களாகவிராது, நல்ல கிராமிய நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டு ஆக்கப்பட்டுள்ளன. ஈழத்து இலக்கியத் துறையிலும், தமிழக நவீன இலக்கியப் பரப்பிலும் ஆழ்ந்த புலமை மிகுந்த ஒருவராக கனக.செந்திநாதன் திகழ்ந்தவர். இவரது இலக்கியச் சேவைகளைப் பாராட்டி 1946ஆம் ஆண்டு கிழக்கிலங்கை எழுத்தாளர் சங்கம் ‘இரசிகமணி’ என்ற பட்டத்தையும், 1967ஆம் ஆண்டு யாழ். இலக்கிய வட்டம் அவரது 50ஆம் ஆண்டு நிறைவை ஒரு இலக்கியப் பெருவிழாவாகக் கொண்டாடியது. 1969ஆம் ஆண்டு அம்பனைக் கலைப் பெருமன்றம் ‘இலக்கியச் செல்வர்” என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தது. 1976ஆம் ஆண்டு யாழ் இலக்கிய வட்டம் அவருக்கு மணிவிழா எடுத்து மகிழ்ந்தது.