லெ.முருகபூபதி. அவுஸ்திரேலியா: முகுந்தன் பதிப்பகம், No. 46, Alamein Street, Morwell, Victoria 3840, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (நீர்கொழும்பு: சாந்தி அச்சகம்).
x, 283 பக்கம், விலை: ரூபா 500., அளவு: 20.5×13.5 சமீ.
பாரதி ஏற்படுத்திய தாக்கம் எத்தகையது? பாரதியை இலங்கையர்களாகிய நாம் எவ்வாறு கொண்டாடுகிறோம்? பாரதி இலங்கையில் எவ்வாறு முக்கியப்படுத்தப்பட்டான்?, பாரதியின் புகழ்பரப்புவதில் எவ்வாறு பங்களிப்புச் செய்தார்கள், பாரதியை இளந்தலை முறையினருக்கு எவ்வாறு கொண்டு சென்றார்கள் என்பது பற்றி இந்த நூல் ஆராய்கிறது. இலங்கையில் பாரதி பெயரில் தலவாக்கலை, பதுளை ஆகிய இடங்களில் பாடசாலைகள் அமைந்துள்ளன. பாரதி பெயரில் சஞ்சிகைகள் வெளியாகியுள்ளன. பாரதி கழகங்கள் அமைந்துள்ளன. பாரதி பெயரில் விழாக்கள் இடம் பெற்றுள்ளன. பாரதி பெயரில் சிறப்பு மலர்கள் வெளியாகியுள்ளன. பத்திரிகைகள் எவ்வாறு பாரதியைக் கொண்டாடுவதில் பங்களித்தன, திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் பாரதி எவ்வாறு காட்சிப்படுத்தப்பட்டான்? பாரதியின் பாடல்கள் எங்கெல்லாம் இடம் பெறுகின்றன? பாரதியின் தமிழ்வாழ்த்து, விழாக்களிலே பாடப்படுவதன் முக்கியத்துவம் என்பன போன்ற பல்வேறு விடயங்களை இந்நூல் பதிவு செய்துள்ளது. முன்னர் வெளிவந்த பாரதி பற்றிய நூல்களிலிருந்தும் வேறுபட்டு ஒரு புதிய கோணத்தில் பாரதி பற்றிய ஆய்வுகளை இந்நூல் தந்துள்ளது. இருபதுக்கும் மேற்பட்ட இலக்கிய நூல்களை எழுதியுள்ள முருகபூபதி, நான்கு தசாப்த காலத்துக்கும் மேலாக எழுதிவருகின்றார்.