15803 உள்ளதான ஓவிய உரைநடையாக்கம்.

ஈழத்துப் பூராடனார் (இயற்பெயர்: க.தா.செல்வராசகோபால்). கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2001. (கனடா: ரீ கொப்பி, டொரன்டோ).

xiv, 120 பக்கம், விலை: கனேடிய டொலர் 10.00, அளவு: 21×14 சமீ.

நாவற்குழியூர் நடராஜன் எனப்படும் கலாநிதி க. செ. நடராசா அவர்கள் கனடாவின் தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ஆரம்பகாலக் (19.06.1993) காப்பாளர்களில் ஒருவர். அவர் தனது இறுதிக்காலத்தில் ஆக்கிய அரியதொரு காவியம் ‘உள்ளதான ஓவியம்’. இலக்கிய நயமும் காவியச் சுவையும் கொண்ட செய்யுள் நூல். இலங்கையில் நடக்கும் உரிமைப் போராட்டத்தை மூலமாகக் கொண்டு எழுதப்பட்டது. இதன் உரைநடையாக்கமே இந்நூலாகும். எழுச்சிப் படலம், எல்லாளிப் படலம், சூழ்ச்சிப் படலம், தன்வினைப் படலம், தெருட்சிப் படலம், மீட்சிப் படலம் ஆகிய ஆறு படலங்களில் இவ்வுரைநடையாக்கம் விரித்து எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்