ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: பாக்கியம் சிவசோதி பதிப்பகம், வள்ளுவன்மேடு வீதி, திருப்பழுகாமம்-01, 1வது பதிப்பு, ஜுன் 2015. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி).
x, 67 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-7786-00-1.
மரபுக் கவிதைகள் எழுதுவது எப்படி என்பது பற்றித் தான் படித்தறிந்தவற்றை வைத்து ‘தென்றல்’ இதழ்களில் தொடராக எழுதிவந்த ஆ.மு.சி.வேலழகன், அவற்றைத் தொகுத்து 18 இயல்களில் நூலுருவாக்கியுள்ளார். உதாரணங்களாக தற்காலப் புலவர்களின் கவிதைகளை குறிப்பிட்டுள்ளமை சிறப்பாகும். இது வாசகர்களுக்கு கவிதையியலைப் புரிந்துகொள்வதை எளிதாக்குகின்றது. இத்தொடரை எழுதுவதற்குத் துணையாக 1974 காலப்பகுதியில் கி.வா.ஜெகந்நாதன் எழுதிய ‘நீங்களும் கவி பாடலாம்’, பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் எழுதிய ’கவிஞராக’, தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் கூறப்பெற்றுள்ள செய்யுளியலை அடியொற்றி புலவர்களான அவினயனார், காக்கை பாடினியார், சிறுகாக்கைப் பாடியனார், கையனார், நத்தத்தனார், பல்காயனார், பல்காப்பயனார், மயேச்சுரர் ஆகியோர் வரிசையில் வந்த அமிர்தசாகரரால் யாத்தளிக்கப்பட்ட ’யாப்பருங்கலக் காரிகை’, கம்பரின் வாரிசுகளில் ஒருவரான தண்டி அவர்களினால் யாத்தளிக்கப்பட்ட ‘தண்டியலங்காரம்’ நூற்பாவினையும், திமிலைத்துமிலனின் ‘பாவலர் ஆகலாம்’ ஆகிய நூல்களை பயன்படுத்தியிருக்கிறார்.