எம்.ஏ.நுஃமான். நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600077: மணி ஓப்செட்).
295 பக்கம், விலை: இந்திய ரூபா 325., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-86820-19-8.
எம்.ஏ.நுஃமானின் இலக்கிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். சமூக யதார்த்தத்துக்கும் இலக்கியப் புனைவுக்கும் இடையிலான உறவு இக்கட்டுரைகளில் அலசப்படுகின்றன. வலுவான கோட்பாட்டு அடிப்படையில் நடுநிலையான கருத்துக்களை முன்வைக்க முயலும் இந்நூல், தமிழ் விமர்சன உலகில் முக்கியமான வரவாகும். தமிழ் இலக்கியமும் சமூகமும், ராஜநாராயணனின் படைப்புலகம், நாட்டார் இலக்கியத்தில் காதல் பாடல்கள்: யதார்த்தமும் புனைவும், சுந்தர ராமசாமியின் ‘காற்றில் கலந்த பேரோசை’, சுந்தர ராமசாமியின் கவிதைக் கொள்கையும் கவிதைகளும், சமகால இலங்கைத் தமிழ்க் கவிதையில் இன முரண்பாட்டின் தாக்கம், யதார்த்தத்தின் உருச்சிதைவு, க.நா.சு. சில குறிப்புகள், உமா வரதராஜனின் ‘உள்மன யாத்திரை’, தோப்பில் முஹம்மது மீரான்: தமிழ் நாவல் உலகில் ஒரு புதிய வருகை, தேரோடும் வீதி அல்லது சிவ கதிரேசனின் மன உலகம், வளவையின் மடியில், கனவும் மனிதன்: ஓர் அறிமுகம், ஜெயகாந்தன்: கலை ஆளுமையும் கருத்துநிலை அரசியலும், புதுமைப்பித்தன்: எழுத்துகளும் பதிப்புகளும், சுதாராஜின் உயிர்க் கசிவு, சட்டநாதன் கதைகளில் போரும் வாழ்வும், கண்ணீரினூடே தெரியும் வீதி, மாப்பசானும் ஜானகிராமனும், தி.ஜானகிராமன்: ஒரு அஞ்சலி, உருவகக் கதைகள், கலீல் ஜிப்ரானின் ‘தீர்க்கதரிசி”யும் கவிஞர் அபுபக்கரின் ‘ஞானி’ யும், மௌனியுடன் ஒரு சந்திப்பு, ‘இலக்கிய ஊழல்கள்’ என்று ஒரு புத்தகம், ‘நட்டுமை’-யதார்த்தமும் புனைவும், அம்பை: ஒரு சுருக்கமான அறிமுகம், தாகூரின் மதச்சார்பற்ற ஆன்மீகம், நவீன தமிழ்க் காவியங்கள், பா நாடகங்கள்: சில கோட்பாட்டுப் பிரச்சினைகள், இரண்டு பூக்காரிகள்: தமிழ்க் கவிதையில் மரபும் புதுமையும் ஆகிய முப்பது கட்டுரைகளை இந்நூல் உள்ளடக்குகின்றது.