ப.தெய்வீகன். சென்னை 51: தமிழினி, 63, நாச்சியம்மை நகர், சேலவாயல், 1வது பதிப்பு, ஜனவரி 2020. (சென்னை: மணி ஆப்செட்).
142 பக்கம், விலை: இந்திய ரூபா 150., அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-81-87642-88-6
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த வாழும் இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ப.தெய்வீகனின் படைப்பு இதுவாகும். ‘குந்த ஒரு இடம் வேண்டும் என்று தங்கள் தாய்நாட்டை நினைத்து அழுது வடிக்கும் முக்கால்வாசிப் பேருக்கு வெளிநாட்டில் குந்துவதற்கு இலவசமாக இடம் கொடுத்தும் ஒழுங்காக குந்தத் தெரியாவிட்டால், இவர்களையெல்லாம் என்ன செய்வது?’ என்ற கேள்வியுடன் இவரது படைப்புக்கள் இத்தொகுதியில் இடம்பிடிக்கின்றன. அப்பாவுக்கு வாழ்த்துகள், வேடதாரிகள் எல்லோரும் போலிகள் அல்லர், வேட்டி, வித்தியாதரன் எனும் துரோகி, தாமரைக்குள ஞாபகங்கள், எனை வென்ற சிங்களம், பாஸ்கி என்ற மந்திரச் சொல், வீரகேசரி, மரணத்தின் வாசனனை, சேலைக் கதைக்கு ஏன் தலைப்பு, பூனைக்குள் ஒளிந்திருக்கும் நினைவுகள் அதிசயம், அம்மாவின் இரகசிய உரையாடல்கள், சீமைப் பெருந்தெருவில் வைகாசி மணித்துளிகள், அவர்கள், ஈழத்தின் மதம், கிட்னி ரசிகர்களே, தோசைக்கும் உண்டோ அடைக்கும் தாழ், உப்பளத்தின் கசப்புகள், பொதுக் கழிப்பறை, ரயில் ராஜாக்கள், ஸ்டிக்கர் பொட்டு, செல்பி சூழ் உலகு, மிக்ஸர் மான்மியம், வட்ஸ் அப் வசந்தங்கள், அவள் ஒரு எதேஇ, அவள் ஒரு இடர்கதை, திருமணம் என்பது திருமதி மணமே, சடங்கு தலைவனுக்கு வாழ்த்து, சோபாவுடன் நடைபெற்ற சோக்கான சந்திப்பு, ஆறாவடு, டமாரவாதிகள் வாழ்க, ஓய்வின் காலம் தெரிதல், ஜிம்முக்கு வந்த டால்ஸ்டாய், குரல் கொடுப்பது வேறு கூ அடிப்பது வேறு, கருணாநிதிக்கு அஞ்சலி, காலா, புர்கா தடை, கறுப்பினப் போராளி ஹென்றி ஒலங்கா, கராட்டி, தவம் கலைந்த முனிவர்கள், உணவில் திருவிழா, தோழர் ரேணுகா, சிட்னி ஆகிய 43 தலைப்புகளில் எழுதப்பட்ட கட்டுரைகளாக இந்நூல் அமைந்துள்ளது.