15811 நாங்கள்-அவர்கள்: கட்டுரைகள்.

மணி வேலுப்பிள்ளை. நாகர்கோவில் 629001: காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (சென்னை 600077: மணி ஓப்செட்).

222 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 200., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-84641-06-1.

ஆள், இடம், காலம் , மொழி எனும் நான்கு பரிமாணங்களையும் ஊடறுத்து விரையும் இந்நூல், கி.மு.7ஆம் நூற்றாண்டையும் இன்றைய தினத்தையும், மேற்குலகையும் தமிழ்ப் பரப்பையும் ஹோமரையும் காளிதாசனையும், தமிழனுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்துகின்றது. நான்கு பகுதிகளைக் கொண்ட இந்நூலில் பகுதி-1இல் ‘ஒடுக்கப்பட்ட மக்கள்’ என்ற தலைப்பின் கீழ், மறதிக்கு எதிரான நினைவின் போராட்டம், வாக்கு, சுயநிர்ணய உரிமை, ஜெயமோகனின் நூறு நாற்காலிகள் நூறு கதைகளுக்கு நிகர், நொறுங்குண்ட இருதயம், நாங்கள்-அவர்கள் ஆகிய கட்டுரைகளும், பகுதி-2இல் ‘ஆளுமைகள்’ என்ற தலைப்பின் கீழ், சிலிய ஜனாதிபதி அலந்தே (1970-1973), டெங் சியாவோ பிங் (1904-1997), அம்மாவின் காதலன் மாயக்கோவஸ்கி, ரோசா லக்சம்பேர்க் ஆகிய கட்டுரைகளும், பகுதி-3இல் ‘தமிழ் மொழி’ என்ற தலைப்பின் கீழ், மொழிபெயரியல்பு, மொழியின் முன் ஆணும் பெண்ணும் சமன், மொழியினால் அமைந்த வீடு, விபுலாநந்த அடிகளின் கலைச்சொல்லாக்க வழிமுறைகள், தமிழ் நடை மீட்சி, ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு ஆகிய கட்டுரைகளும், பகுதி-4இல் ‘கிரேக்கச் சிந்தனை’ என்ற தலைப்பின் கீழ் பொலிகுதிரை ஈந்த அரியணை, மீனுடன் மீண்ட கணையாழி, அந்தப்புரம், சாக்கிரட்டீஸ் ஒரு மீள்நோக்கு ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. ஈழத்தில் பிறந்து கனடாவில் வசிக்கும் மணி-வேலுப்பிள்ளையின் ஆறாவது நூல் இது.

ஏனைய பதிவுகள்

Using the Elements to the Watchtowers

Articles Dragonfly Happen (Local Us citizens) Horned Jesus Regarding the historical years, the new drug people or shamans familiar with carry a big drug wallet