கெகிறாவ ஸஹானா. கெகிறாவ: ஏ.எஸ்.ஸஹானா, 32/21, செக்கு பிட்டிய தெற்கு, செக்குபிட்டிய, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ்).
(11), 12-120 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15.5 சமீ., ISBN: 978-955-51679-6-3.
அவ்வப்போது ஆசிரியர் ஈழத்தின் கலை இலக்கியச் சஞ்சிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளின் தேர்ந்த தொகுப்பு இது. பாரதி நமக்கும் இனியன், இந்தியக் கவிகளும் யானைகளும், புதிய தரிசனம், அதிசய எழுத்து வன்மை: கு.அழகிரிசாமி, பன்மைத்துவம் பற்றிய புரிதலை தரும் மூன்று புத்தகங்கள், சில சிறந்த திரைப்படங்கள், தன்னையே கவிதையாக்கிய கவிஞன், தமிழில் உருவக அணி இன்னும் தேவைதானா? ஆகிய கட்டுரைகள் முதலிலும் அதனைத் தொடர்ந்து ‘அருகிருந்து ஆட்கொண்ட ஆளுமைகள்’ என்ற தலைப்பின் கீழ், காற்றில் கலந்த கண்ணீர்க் காவியம் ராஜகுரு சேனாதிபதி கனகரட்ணம், பண்ணாமத்துக் கவிராயர் பற்றி நான் அறிந்தவையும் நேரில் தெரிந்தவையும், அனுராதபுரத்தின் முதுசொம்-அன்பு ஜவஹர்ஷா, தீராத மானுட நேயத் தாகம் கொண்ட மேமன்கவி, மறக்க முடியாத ஜீவா ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் முன்னர் தினகரன், ஜீவநதி, மல்லிகை, ஞானம், படிகள் ஆகிய ஊடகங்களில் பிரசுரமானவை.