ஸாதியா பௌஸர்;;. கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xxii, 258 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-717-2.
இந்நூலானது மலையகக் கவிதைகளும் மலையகப் பெண்களும், மலையகக் கவிதைகளும் மலையகச் சிறுவர்களும், மலையகக் கவிதைகளும் மலையகத்தின் அண்மைக்காலப் போக்குகளும், மலையகக் கவிதைகளும் மலையக பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் ஆகிய நான்கு இயல்களில் ஆய்வுசெய்துள்ளது. மலையகக் கவிதை தொடர்பாக இந்நூல் ஆராய்ந்தாலும், வேண்டியவிடத்து மலையகச் சிறுகதை, நாவல் முயற்சிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் இந்நூலின் சிறப்பம்சமாகும். கலாநிதி ஸாதியா பௌஸர் கண்டி கெலிஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழ்ச் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் முதுகலைமாணிப் பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டவர்.