ஸாதியா பௌஸர். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
xii, 210 பக்கம், விலை: ரூபா 950., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-659-718-9.
இந்நூலானது மலையக மக்களின் வரவும் ஆரம்ப காலகட்டப் பிரச்சினைகளும் (மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்தமைக்கான காரணங்கள்/ஆரம்ப காலகட்ட வாழ்க்கைப் போராட்டம்), மலையகக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆரம்பகாலம் 1825-1920/விழிப்புணர்ச்சிக் காலம் (1920-1950களின் இறுதிவரை/எழுச்சிக் காலம் 1960 தொடக்கம் இன்று வரை), மலையக மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைகள் (தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட சட்டங்களும் ஒப்பந்தங்களும்/இனக்கலவரங்களும் அவற்றினால் ஏற்பட்ட விளைவுகளும்/அரசியல் தலைவர்களின் நிலை), மலையகக் கவிதைகளும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளும் (உணவுப் பிரச்சினை/உடைப்பிரச்சினை/வறுமை/வதிவிடப் பிரச்சினை/போதியளவு மருத்துவ சுகாதார போக்குவரத்து வசதிகள் இன்மை) ஆகிய நான்கு இயல்களில் தன் ஆய்வினை முன்னெடுத்திருக்கின்றது. கலாநிதி ஸாதியா பௌஸர் கண்டி கெலிஓயாவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தமிழ்ச் சிறப்புக் கலைமாணிப் பட்டத்தையும் முதுகலைமாணிப் பட்டத்தையும் கலாநிதிப் பட்டத்தையும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டவர்.