ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: இளவரசி உதயசூரியன் பதிப்பகம், வள்ளுவன் மேடு, மாவேற்குடாப் பிரிவு-01, திருப்பழுகாமம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (கொக்கட்டிச்சோலை: அக்ஷயன் அச்சகம், பிரதான வீதி).
70 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-7300-05-4.
இது ஒரு திருக்குறள் ஆய்வுத் தொகுப்பு. திருக்குறளின் பல்வேறு பரிமாணங்களை எமக்குக் பகுத்தறிவுப் பார்வையின் ஊடாகக் காட்டும் வகையில் இந்நூலிலுள்ள ஆறு ஆக்கங்கள் காணப்படுகின்றன. நாம் யார்?, குறளும் நானும், மனிதன் கேட்க மனிதனால் ஈந்த மறை, வள்ளவனும் ஓர் விவசாயி, அறிவற்றம் காக்கும் கருவி, அன்பும் அறிவும் உடைத்தாயின் ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. தேடலே வாழ்க்கையாக வாழும் ஈழத்தமிழரில் மட்டக்களப்பு, திருப்பழுகாமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆ.மு.சி.வேலழகனும் ஒருவர். 1972 முதல் எழுதிவரும் இவர், இதுவரை முப்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதி வெளியிட்டவர்.