மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, இல. 90, ஞானவைரவர் வீதி, கோண்டாவில், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).
vii, 128 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-98925-6-4.
பண்டைத் தமிழரது வாழ்வியலில் தாய்மார் பற்றிய கருத்து நிலைகளைத் தொகுத்து வழங்கும் வகையில் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. ‘பழந்தமிழர் அகப்பாடல் ஓர் அறிமுகம்’, ‘தாயர் அறிமுகம்’ (பெற்றதாய் அறிமுகம், செவிலித்தாய் அறிமுகம்), ‘பண்பாட்டு நடைமுறைப் பேணல்’ (குழந்தை வளர்ப்பு நிலையில், விளையாட்டு, தோழியரும் ஆயமும், இளமை வளர்ப்பு நிலை, இரவு உறக்க நிலை, செடி வளர்ப்பு, அணிகலன் அணிதல், இற்செறிப்பு நிலை, நடைமுறைகளும் நம்பிக்கைகளும், காப்புப் பூணல், கிளி கடிதல், புள்ளோப்பல், மலர் கொய்தல், தழை கொய்தல், அலர் கூறல், சிலம்பு கழிதல், வெறியாடல், கட்டுக்கேட்டல், கழங்கு அறிதல், விரிச்சி நிற்றல், வதுவை அயர்தல், உடன் போக்கு, நடுகல் வழிபாடு, மனை வாழ்க்கை நிலை), ‘பிற்காலப் பண்பாட்டின் செல்நெறி’ (அறநீதி நூல்களில் தாய்மை), ‘தமிழர் யப்பானியர் பண்பாட்டு ஒற்றுமை நிலை’, ‘இன்றைய நிலைப்பாடு’ ஆகிய ஆறு இயல்களில் இந்நூல் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இந்நூலாசிரியர் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தனது இளமாணிப் பட்டத்தைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பெற்றவர்.