ஆ.மு.சி.வேலழகன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல. 64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 44, ஸ்டேஷன் வீதி).
165 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 350., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-8715-78-9.
வாழ்வுக்குகந்த வள்ளுவநெறி, வள்ளுவமும் நெறிசார்பின்மையும், சமணநெறிக் கொள்கைகளின் உண்மை இயல், புத்தரும் அவர் கண்ட நெறியும், திருக்குறள்-பிற மொழிபெயர்ப்பாளர்கள், திருக்குறள் உரையாசிரியர்கள், திருக்குறள் ஆய்வியல் அறிஞர்கள், திருவள்ளவர் பெருந்தகைக்கும் அவர்தம் திருக்குறளுக்கும் பாவால் மாலை அணிவித்த சங்ககாலப் புலவர்கள், வைணவ நெறி பற்றிய சில குறிப்புகள் எனப் பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்நூல் தெய்வத் திருமறையாம் திருக்குறளுக்கான பின்புலத் தகவல்களை வழங்கும் உசாத்துணை நூலாகப் பேணும் வகையில் எழுதப்பட்டுள்ளது.