சி.மௌனகுரு (மூலம்), காசுபதி நடராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரைக் குழு, விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச் சபை, 1வது பதிப்பு, நொவெம்பர் 1991. (அச்சக விபரம் தரப்படவில்லை).
vii, 41 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×11 சமீ.
சுவாமி விபுலாநந்தர் நினைவுப் பேருரைத் தொடரில் 10.11.1991 அன்று நிகழ்த்தப்பட்ட முதலாவது பேருரை இதுவாகும். விபுலாநந்தரிடம் மனிதனையும் சமூகத்தையும் புரிந்து கொள்கின்ற-இயங்கியல் நிலையில்-அதன் சகல முரண்பாடுகளோடும் அதனைக் காணுகின்ற அகண்ட பார்வையும், அனைத்திலும் தொடர்பைக் காணுகின்ற தத்துவ நோக்கும் காணப்படுவதாக பேராசிரியர் மௌனகுரு விளக்குகின்றார். மேலும் சுவாமி விபுலாநந்தர் பழைமை பேணியவரில்லை எனவும், பழமையினின்று புதுமையை அவாவினார் என்றும் அப்புதுமை உலகம் தழுவியதாக உலக கலை இலக்கியப் போக்குடன் ஒட்டியதாக அமையவேண்டும் என அவாவினார் என்றும் தமிழை உணர்வுநிலையில் அணுகாமல் அறிவு நிலையில் நின்று அணுக முயன்றார் எனவும் குறிப்பிடுகிறார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13230).